Pages

Thursday, December 23, 2010

கீரை வகைகள் தீர்க்கும் நோய்கள்முருங்கைக்கீரை:

சிறுநீரக சம்பந்தமான சகல வியாதிகளையும் தீர்க்கும்.
பால் கொடுக்கும் தாய்மார் 3 வேளையும் சாப்பிடும் போது பால் சுரக்கும்.

முளைக்கீரை:

இது வயிற்றுப்புண், நரம்புத்தளர்ச்சி, மாலைக்கண்நோய், நீரடைப்பு, மூக்கு, தொண்டை, பல் சம்பந்தமான நோய்களுக்குப் பலன் தரும் கீரையாக இருக்கின்றது.

பொன்னாங்கண்ணிக்கீரை:

கண் சம்பந்தமான நோய்களைத் தீர்க்கும் சக்தி வாய்ந்தது. சூடான உடல் உள்ளவர்களுக்கு குளிர்மையைக் கொடுக்கும். தோல் சுரக்கத்தை நீக்கும்.

வெந்தயக் கீரை: 

அறிவுக்குத் தெளிவ தரும் கீரை. உடல் சுறுசுறுப்பைக் கொடுக்கும். பலம்தரும். சமீபாட்டுக் கோளாறுகளை நீக்கும்.

அகத்திக் கீரை:

மலச்சிக்கலை நீக்கி சமிபாட்டுத் தொல்லைகளை நீக்கும். மூளைக்கோளாறுகள் நீங்கும். இதில் சுண்ணாம்புச்சத்துக்கள் நிறைய இருக்கின்றது.

கொத்தமல்லிக்கீரை:

மூளை, மூக்கு, சிறுநீரகம் சம்பந்தமான சகல வியாதிகளையும் நீக்குகின்றது. எலும்புகளுக்குத் தேவையான சக்தியைக் கொடுக்கின்றது.

 நன்றி சித்தமருத்துவக்குறிப்புக்கள்

Tuesday, December 7, 2010

தலையிலிருந்து கழன்று விழும் தலைமயிர்                                                     தலையிலிருந்து கழன்று விழும்  
                                                     தலைமயிர் 
   அழகுக்கு அழகு சேர்க்கும்
   அலங்காரம் செய்ய உதவும் 
   பெண்ணழகைப் பேரழகாக்கும்        
    பெருமைமிக்கத் தலைமுடி

இத்தலைமுடி அளவுக்கு அதிகமாகத் தலையை விட்டுக் கழன்றுவிழும் போது, கலங்குபவர்கள் அதிகம். வழுக்கைத் தலை என்று மற்றவர்களால் அழைக்கப்படுவோமே என்று வெட்கப்படுபவர்களும் அதிகம். என் செய்வது ஆரம்ப காலத்திலே எதிலுமே கவலையின்றி, அதிகமாய் இருக்கும் போது அது பற்றிக் கவலை கொள்ளாது, நோய் கண்டவுடன் கலங்குவது யாருடைய தவறு. 

          ஏறக்குறைய ஒரு மனிதனுக்கு 70 - 100  மயிர்கள் நாளொன்றுக்கு உதிர்கின்றன. ஆனால், இக்கணக்கு அதிகரிக்கும் போது அல்லது இழந்த மயிர்களுக்கு ஈடு செய்யும் வகையில் மயிர்கள் உற்பத்தியாகாத போதே தலைமயிர் உதிர்கின்றது என்ற கவலை ஏற்படுகின்றது. இதைவிட வேலைப்பலுவினால் மனம் அமைதியில்லாது நிலைகுலையும் போது தலைமயிர் எம்மைவிட்டு மெல்ல மெல்ல போகத் தொடங்குகின்றது. அதனால், எமது பரபரப்பைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகளை நாம் கையாள வேண்டும். தேவையில்லாமல் எப்போதும் கவலையில் தோய்ந்து இருக்காதீர்கள். யாருக்குத்தான் கவலை இல்லை. நிறைவான மனதுடன் யார்தான் உலகில் வாழுகின்றார்கள். பிரச்சினைக்கான தீர்வு பற்றிச் சிந்திக்காது. அது பற்றிச் சொல்லிச் சொல்லி கவலைப்படுவது தலமுடிக்கு மட்டுமல்ல. உடல்உள நலத்திற்கும் கேடுவிளைவிக்கும். இதில் கவனம் எடுக்க வேண்டியது அவசியமாகின்றது. தலையில் பேன் என்ற ஒரு ஜீவராசி சந்தோசத்துடன் தலையில் உலாவிவரும் போது தலைமுடி அருவருப்புடன் தலையை விட்டு மெல்லக் விலகும். அதனால் அந்த ஜீவராசியை ஒழித்துக் கட்டும் நடைமுறைகளைக் கையாள வேண்டும். கீழே நான் தந்திருக்கும் வீட்டு வைத்தியத்தைப் பயன்படுத்தி, இத்தொல்லையிலிருந்து விலகுங்கள். இல்லையென்றால், தோல் வைத்தியரிடம் நாடி இதற்குரிய மருந்துகளைப் பெற்றுக் கொள்ளுங்கள். தைரொய்ட் சுரப்பிகளில் ஏற்படும் குறைபாடும் தலைமுடி உதிர்வதற்கு முக்கிய காரணமாக அமைகின்றது. தைரொயிட் சுரப்பி சரியான முறையில் தொழிற்படுவதற்கு மருத்துவம் செய்வது நன்று. கடல்மீன் வகைகள், சிறியமீன் வகைகள் இந்நோய்க்கு சிறந்த பலாபலனைத் தரும் என வைத்தியர்கள் கருதுகின்றார்கள். பலவகையான இரசாயணப் பதார்த்தங்களை எமது அழகுக்காகவும் நாகரிகத்திற்காகவும் பயன்படுத்துகின்ற போது ஒவ்வாமை கொண்ட தலைமயிர் ஒதுங்க நினைக்கின்றது. இளையதலைமுறை இதைத் தவிர்க்க மாட்டாது என்பது உண்மைதான், எனவே தரமானவற்றைத் தவிர்த்துக் கொண்டு இயற்கையான மூலிகைத் தயாரிப்புக்களைப் பயன்படுத்துவது உகந்தது என்று நினைக்கின்றேன். தலையில் உருவாகும் இறந்த செதில்களாகக் காணப்படும் பொடுகு தலைமுடிக்குக் கேடாக அமைகின்றது. தலையின் உட்பகுதியில் இருக்கின்ற எண்ணெய்ச்சுரப்பிகள் அதிகமாகச் சுரக்கப்படும் போது தலைமுடித் தூவாரத்தினூடாகக் காய்ந்து வெண்மையாக வெளிவருகின்றது. இதுவே பொடுகு எனப்படுகின்றது. ஒரு வாரத்தில் இரண்டுமுறை தலை கழுவுதலும், காற்றோட்டமுள்ள இடத்தில் வாழுதலும் பொதுவாக எல்லாவற்றிற்ம் நல்லது. 

         எனவே நல்ல பலன்களைப் பெற வேண்டுமானால்,மேற்கூறியவற்றுடன் நாம் அதிக கவனம் எடுக்க வேண்டியது அவசியமாகின்றது. தலையைத் துப்பரவாக வைத்திருத்தலும், சத்துணவுகளை உட்கொள்ளலும் தலைமுடிக்குப் பலன்தரும்.

விற்றமின் ஏ தலைமயிர் வளர்வதற்கு உகந்தது. கரட்டிலும், பால் உற்பத்திப் பொருள்களிலும், குடைமிளகாய், மீன் எண்ணெய், போன்றவற்றிலும் விற்றமின் ஏ இருக்கின்றது. எல்லாவிதமான விற்றமின் B க்களும் தலைமுடிக்கு உறுதியைக் கொடுக்கின்றது. விற்றமின் B3 (Niacin) விற்றமின் B5 (Pantothensäure) Vittamin B6 (Pyridoxin) போன்றவைகள் தலைமயிரில் ஏற்படுகின்ற நோய்களை நீக்கி தலைமயிரைப் பாதுகாக்கின்றன. இறைச்சி, முட்டை மஞ்சள்க்கரு, கடலை போன்ற வகைகள்,(Nüsse, (Nuts)) இவற்றில் விற்றமின் B போதுமான அளவில் இருக்கின்றது. ஆனால், அளவுக்கதிகமான விற்றமின்களும் உடலுக்குக் கேடுவிளைவிக்கும் அவதானம் எடுக்கவும். இரும்புச் சத்து குறைவாக இருக்கும் போது தலைமுடி உதிர்வதற்குரிய சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. அதனாலேயே இரும்புச்சத்து அதிகமாக உள்ள இறைச்சி, குடைமிளகாய், Broccoli போன்றவற்றை உண்ணும்படி வைத்தியர் பணிக்கின்றார். 

இதைவிட முக்கியமாக தலைக்கு வேண்டிய யோகாசனப் பயிற்சிமுறைகளைக் கையாளுதலும் ( தலைக்கு இரத்தோட்டம் செல்லும்) தலையை மெதுவாக மசாஜ் செய்துவிடுதலும் தலைப்பராமரிப்புக்கு உகந்தது. தலைமுடி கிரட்டின் (Keratin) என்று சொல்லப்படுகின்ற புரதப்பொருளாலான மயிர், உட்தோலின் உட்பகுதியில் நன்றாகப் பதியம் செய்யப்பட்டுள்ளது. அதனால், புரதச்சத்துக்கள் நிறைந்த உணவுகள் மயிர்கள் உற்பத்தியாவதற்கும், முக்கியமான செல்களுக்கும் உதவுகின்றன. எனவே புரதச்சத்துக்கள் அடங்கிய தாவரப்புரதங்களாகிய உருளைக்கிழங்கு, தானியங்கள், சோயா போன்றவற்றை உண்ணுதல் முநசயவin இற்கு உதவுகின்றது. இந்த மயிர்கள் மெலனின் என்னும் பொருளாலேயே நிறமூட்டப்படுகின்றன. இந்த மெலனின் உற்பத்தி வயதாகிவிட குறைவடைவதனாலேயே தலைமயிர்கள் வெள்ளை, பழுப்பு நிறங்களாக மாற்றமடைகின்றன. தோலிலுள்ள எண்ணெய்ச்சுரப்பிகள் மூலமே எப்போதும் மயிர்கள் எண்ணெய்த்தன்மையாக இருக்கின்றன. இவ்வாறான தன்மைகளையுடைய மயிர்களைப் பாதுகாப்பதற்கு நாம், முழுக்கவனம் எடுக்க வேண்டியது அவசியமாகின்றது.


பேன் தொல்லை நீங்க:

1. துளசி இலை, வேப்ப இலை போன்றவற்றைப் பால்விட்டு அரைத்துப்  
        பின்    தலையிலே தேய்த்துக் குளித்து வந்தால் பேன் தொல்லை தீரும்
2. மலைவேம்பு இலையை அரைத்துத் தலையில் பூச வேண்டும்.
3. சிறிதளவு அரிமதுரம் எடுத்துப் பால் விட்டு அரைத்துத் தலையில் 
        நன்றாகப் பூசி, 25 நிமிடங்களின் பின் வெந்நீரில் குளித்தவர பேன்  
        அடியோடு மறைந்துவிடும்.

தலைமுடி வளரவும் முடி உதிர்வதைத் தடுக்கவும்:

1. ஒரு கைபிடி அளவு வேப்ப இலையை எடுத்து நீரில் வேக வைத்து ஒரு 
        நாள் கழித்து அடுத்தநாள் எடுத்து, மீண் டும் ஒரு முறை இந்நீரைச் 
        சூடாக்கி முழுகி வந்தால் தலைமயிர் கொட்டுவது தவிர்க்கப்படும். 
2. வெந்தயத்தை எடுத்து பவுடராக்கி தேங்காய் எண்ணெயில் ஊற 
       வைக்க வேண்டும். பின் ஒரு வாரத்தின் பின் தினமும் தலையில் 
        தேய்த்து வந்தால், தலைமுடி உதிர்வது நின்றுவிடும்.
3. சுத்தமான 5 மேசைக்கரண்டி தேங்காய்ப்பால் எடுத்து ஒரு 
        மேசைக்கரண்டி தேசிக்காய்ச்சாற்றை அதனுடன் கலந்து 
         மயிர்க்கால்களில் மசாஜ் செய்து காயவிட்டுப் பின் கழுவவும். இப்படிச்
         செய்து வந்தால் தலைமுடி உதிர்வதைக் கட்டுப்படுத்தலாம்.
4. இரண்டு முட்டைகளை எடுத்து மூன்று மேசைக்கரண்டி நீருடன் 
       சேர்த்து நன்றாக அடிக்க வேண்டும். பின் தலைமயிர் வேர்களில் பூசிச் 
        சிலநிமிடங்களின் பின் கழுவலாம். இப்படிச் செய்துவர தலைமயிர் 
        உதிர்வது தடுக்கப்படும். அத்துடன் தலைமயிர் வேர்க்கால்கள் 
        உறுதியடையும்.
5. கறிவேப்பிலையை அரைத்துத் தேங்காய் எண்ணெயில்க் கலந்து 
       தலையில் காய்ச்சி தலையில் தேய்த்து வர தலைமுடி நன்றாக  
       வளரும்.
6. கரட், தேசிக்காய்ச்சாறு இரண்டையும் கலந்து தேங்காய் எண்ணெயில் 
        காய்ச்சித் தலையில் பூசிவர தலைமுடி நன்றாக வளரும்.

மேற்கூறிய வழிமுறைகளில் ஏதாவது ஒன்றைப் பின்பற்றிப் பலன்பெறுங்கள். 


ஆரோக்கியமான தலைமயிருக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள்


Vittamin A
Vittamin C
Vittamin H
Iron
Copper
Zinc


Monday, November 29, 2010

Winter இல் தோலைப் பாதுகாத்தல்

Winter  இல் தோலைப் பாதுகாத்தல்

உங்கள் தோல் வரட்சியானதாக இருந்தால், சவர்க்காரம் குறைவாகப் பாவித்தல் வேண்டும். வரட்சியான தோலுக்கு Coldcream  உம் ஒலிவன் எண்ணெயும் சிறந்ததாக அமைகின்றது. ஆனால், இவற்றைப் பாவிக்கும் முன் முகத்தை சுத்தம் செய்ய வேண்டும். தக்காளிச் சாறு முகத்தைச் சுத்தம் செய்யத் தகுந்ததாக அமைகின்றது. இரவிலே முகத்தைச் சுத்தம் செய்வதற்கு நீரைப் பயன்படுத்தாமல், சூடான நீரினுள் ஒரு சிறிய துவாயை அமிழ்த்தி எடுத்து, நன்றாகப் பிழிந்த பின் முகத்தைத் துடைத்து எடுக்கலாம். 

வரட்சியான தோல்:

ஒரு Bucket நீரினுள் ஒரு தேக்கரண்டி ஒலிவன் எண்ணெயைக் கலந்து குளிப்பது வரட்சியான தோல் நீங்கச் சிறந்த வழிமுறையாகும். 

குளிக்கச் செல்வதற்கு முன் சிறிதளவு சூடான ஒலிவன் எண்ணெயைப் பூசி மசாஜ் செய்த 15 நிமிடங்கள் கழித்து குளித்து வர தோல் பிரகாசமாய்த் திகழும். 

ஒரு தேக்கரண்டி வாதாம்பருப்பு எண்ணெய் 10 தேக்கரண்டி கொதிக்க வைக்காத எண்ணெய் ஒரு விரல்களால் சிறிதளவு கிள்ளி எடுத்த சீனி போன்றவற்றை நன்றாகச் சேர்க்க வேண்டும். அதன் பின் இக்கலவையை ஒரு பஞ்சினால் எடுத்து முகத்தில் பூசி 15 நிமிடங்கள் கழித்துக் கழுவவும்.

Egg Pack

ஒரு முட்டை மஞ்சட் கரு, இரண்டு தேக்கரண்டி ழுசயபெந தரiஉநஇ அரைத் தேக்கரண்டி தேசிப்புளி, சிறு துளிகள் வாதாம்பருப்பு எண்ணெய் போன்றவற்றை நன்றாகக் கலந்து முகத்தில் பூச வேண்டும். அரை மணித்தியாலங்கள் கழிந்தபின் முகத்தைக் கழுவலாம். 

கடலை மா Pack:

ஒரு தேக்கரண்டி கடலை மா, ஒரு சிறிதளவு மஞ்சள், அரைத் தேக்கரண்டி தேன், அரைத் தேக்கரண்டி ஒலிவன் எண்ணெய் இவற்றை ஒன்றாகக் கலந்து முகம் கழுத்துப் பகுதிகளுக்குப் பூசி வர நாளடைவில் முகம் பளிச் என்று இருக்கும்.

எண்ணெய் பசையான தோல் உள்ளவர்களுக்கு சிலவேளைகளில் முகப்பருக்கள் தோன்றலாம். கவலைப்படத் தேவையில்லை. முகப்பருக்கள் நீங்கவும் வழிமுறைகள் இருக்கின்றன.

Friday, November 26, 2010

நீரிழிவு நோய் (சர்க்கரை நோய்)

                           நீரிழிவு நோய் (சர்க்கரை நோய்)

''நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்'' நாம் தேடிக்கொள்ளும் நோய்களும் உண்டு. நமது பெற்றோர் நமக்கு அன்பளிப்பாகத் தருகின்ற நோய்களும் உண்டு. இந்தவகையிலே உலகத்தையே ஆட்டிப்படைக்கும் பரம்பரை நோயாகக் கருதப்படும் நீரிழிவு நோய் பற்றி வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமையடைகின்றேன். பலர் இது பற்றி என்னிடம் வினாவியதற்கமைய என் தேடலை இங்கு தெளிவாக்குகின்றேன். 

இந்நோய் பரம்பரையாக வருவதாக மருத்துவம் எடுத்துக்காட்டியிருந்தாலும், யாருக்கு வேண்டுமானாலும் இந்நோய் ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. இதுபற்றி எமது பிள்ளைகளுக்கு வராமல் நாம் கவனம் எடுப்பது அவசியமாகப்படுகின்றது. மனஅழுத்தம், உடற்பயிற்சியின்மை, கவலை, ஒழுங்கற்ற உணவுப்பழக்கவழக்கம், கூடிய கொழுப்பு உணவுகள் உட்கொள்ளுதல் போன்றவை நீரழிவை எமக்குக் கொண்டுவந்து சேர்த்துவிடும். 

இரப்பைக்குப் பின்னால் இருக்கின்ற பான்கிறியாஸ் என்கின்ற சுரப்பியிலே பல திட்டுக்கள் இருக்கின்றன. இத்திட்டுக்களிலேயே இன்சுலின் சுரக்கப்படுகின்றது. இந்த இன்சுலின் இரத்தத்துடன் கலந்து உடலுக்குச் சக்தியைக் கொடுக்கின்றது. இந்த இன்சுலினில் இருக்கின்ற சீனியை உடல் செல்கள் எரிபொருளாகப் பாவிக்கின்றது. இந்த பான்கிறியாஸ் என்ற சுரப்பியில் பாதிப்பு ஏற்பட்டால் இன்சுலின் உற்பத்தி செய்ய முடியாது போய்விடும்.  இந்தச் சுரப்பி இரப்பையின் பின் இருப்பதனால் வயிறு பெருத்துக் காணப்பட்டால் இச்சுரப்பி நசுக்கப்படும். இதன் மூலமும் இன்சுலின் சுரப்பது தடுக்கப்படும். இதனால் செல்களின் இயக்கம் தடுக்கப்படும். இந்தச்சீனியின் அளவு சரியான முறையில் கட்டுப்படுத்தப்படவில்லை என்றால், நாடிகளின் சுவர்களில் கொழுப்புப்படியும் சந்தர்ப்பம் ஏற்படுகின்றது. 

இந்நோய் மூன்று வகையாக் காணப்படுகின்றது. முதலாவது வகை இன்சுலின் சுரப்பிகள் இன்சுலினைச் சுரக்கும் தன்மையை இழந்திருப்பதனால் ஏற்படுகின்றது. இது அதிகமாகக் குழந்தைகள், சிறுவர்கள் இளம் வயதினருக்கு ஏற்படுகி;ன்றது. இரண்டாவது வகை இன்சுலின் போதியளவு சுரக்காததனால் ஏற்படுகின்றது. 90 வீதமானோர் இக்காரணத்தினால் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். மூன்றாவது வகை கர்ப்பகாலத்தில் வருகின்ற நீரிழிவாகும். இது 2 தொடக்கம் 4 விதமானவர்களுக்கு ஏற்படுகின்றது. குழந்தை பிறந்தவுடன் சுகமாகி விடுகின்றது. சிலவேளை பிற்காலத்தில் மீண்டும் தோன்றலாம். 

நீரிழிவு நோயாளிக்கு காயம் சுகமாவது கடினம்:

இன்சுலினின் உற்பத்தி குறையும் போது இரத்தம் உறைவதற்குத் தேவையான பைரினோஜன் என்னும் பொருள் உற்பத்தியாவதில்லை. இதனால் இரத்தம் உறையாது போக காயம் குணமடையமாட்டாமல் போகின்றது. இதனாலேயே இரத்தத்தில் இருக்கின்ற சீனிச்சத்து சிறுநீராக அடிக்கடி வெளியேறுகின்றது. 


நீரிழிவு நோயைத் தவிர்ப்பதற்குரிய உணவுவகை:

பூமியிலே அனைத்தும் எமக்காகப் படைக்கப்பட்டிருக்கின்றன. முடியாது, இயலாது என்று யாரும் எதற்கும் கவலைப்படத் தேவையில்லை. இருக்கவே இருக்கின்றது இயற்கையில் உணவுவகை. அதில் 

1. பாவற்காய்:

பெயரைச் சொன்னாலே நாவில் கசப்புச் சுவை எட்டுகிறது அல்லவா! கசப்புத் தான், ஆனால் நீரிழிவு நோயாளிக்குத் தேவையான இன்சுலின் போன்ற ஒருவகைப் பதார்த்தம் இதில் இருக்கின்றதாம். இன்சுலின் அளவைக் கட்டுப்படுத்தும் தன்மையும் உள்ளது. அப்படி என்றால், அது உகந்தது தானே.

உண்ணும் முறை:
  
பாவற்காயை குளிர் நீரில் நன்றாகக் கழுவி நீருடன் சேர்த்து அரைத்து  காலை மாலை இருவேளை இச்சாற்றை அருந்தி வர பயன் கிடைக்கும்.

பச்சையாக சிறுசிறு துண்டுகளாக வெட்டி அத்துடன் சின்னவெங்காயம் பச்சைமிளகாய் சிறுசிறு துண்டுகளாக அரிந்து சேர்த்து உப்பு தேசிப்புளி கலந்தும் சாப்பிடலாம்.

வெந்தயம்:
நன்றி: திரு சதா.சிறிகாந்தா


  வெந்தயத்தில் Triconelline, Mucilage,Saponin, Cholin, Manose போன்ற பொருள்கள் இருக்கின்றன. அத்தடன் நிக்கோடின் அசிட் என்னும் உயிர்ச்சத்து B யும் இருக்கின்றது. அத்துடன் தாதுப் பொருள்கள், புரதம், ஈரலுக்குத் தேவையான மருத்தவக் குணமும் இருக்கின்றது. இரத்தத்தில் வெல்லம் அதிகமாக இருப்பவர்கள் 100 கிராம் வரை உண்ண வேண்டும். மற்றையோர் ஒரு நாளுக்கு 25 கிராம் உண்ண வேண்டும். உடல் சூட்டைக் குறைக்கும் தன்மையும் வெந்தயத்துக்கு உண்டு.  

உண்ணும் முறை:

கறிகளுக்கு சாதாரணமாகச் சேர்த்துக் கொள்ளலாம்.
வெந்தயத்தில் குழம்பு செய்து உண்ணலாம்.
நோயுள்ளவர்கள் பொடியாக்கி நீரில் ஊற வைத்து அல்லது முழு வெந்தயத்தை சிறிதளவு எடுத்து நீரில் ஊற வைத்து அடுத்தநாள் காலையில் அந்நீரை அருந்தலாம். ஊறிய மிகுதியை கறிக்குப் பயன்படுத்தலாம்.

Monday, November 22, 2010

Hand Lotion Hand Lotion  தயாரிக்கும் முறை


2     தேக்கரண்டி கிளிசரீன் (Glysarin)
2  தேக்கரண்டி கோர்ன்பிளவர் (Cornflour)
1  கப் Rose Water

ஒரு அளவான அளவான சூட்டில் கிளிசரீரைச் சுடாக்குங்கள். கொஞ்சம் கொஞ்சமாக கோர்ன் பிளவரை அதற்குள் சேருங்கள். இந்தக் கலவை இறுக்கமான பதத்திற்கு வரும்போது அடுப்பில் இருந்து இறக்கி Rosewater  இதனுள் விட்டு 10 நிமிடங்களுக்கு கலக்குங்கள். இப்போது Hand lotion ரெடி. ஒவ்வொரு முறையும் கைகள் அலம்பிய பின் இதனைப் பூசலாம்.

Tuesday, November 16, 2010

அழகை ஆராதிப்போம்

                                           அழகை ஆராதிப்போம்


 ஒரு அழகான பட்டுப்புடவையைக் கடையில் வாங்குகின்றோம். அதை அழகு மாறாமல் பயன்படுத்துவதற்கு எவ்வளவு முயற்சிப்போம். ஒரு அழகான பொருளை வாங்கினால், அதன் அழகு மாறாமல் எவ்வளவு கவனத்துடன் பாவிப்போம். அதேபோல் எம்மோடு கூட வரும் எமது சருமத்தை எப்படி நாம் பராமரிக்க வேண்டும். அதில் எவ்வளவு கவனத்தை நாம் எடுத்துக் கொள்ளல் வேண்டும். உச்சி தொட்டு உள்ளங்கால் வரை எம்முடைய உடல் முதலில் எமக்கு அழகாகத் தெரிய வேண்டும். எம்மை நாம் முதலில் காதலிக்க வேண்டும். உலகத்தில் பிறந்த அனைவரும் ஏதோ வகையில் அழகானவர்களே. அவ் அழகைப் பேணிப் பாதுகாத்தலே எமது உடலுக்கு நாம் செலுத்தும் நன்றிக்கடனும் மெருகூட்டலுமாக அமைகின்றது. முதலில் தன்னம்பிக்கை மனிதனை வசீகரப்படுத்துகின்றது. நான் என்ன ஐஸ்வர்யாராயா என்னை நான் அழகுபடுத்த என்று எமது பல அம்மாமார்கள் அலுத்தக் கொள்வார்கள். இவ்வாறு நீங்கள் கூறுகின்ற போது உங்கள் அழகில் பாதி குறைந்துவிடும். எனவே நானும் ஒரு அழகி என்னும் நினைப்பே உங்களை ஒருபடி உயர்த்திக் காட்டும்.

     ஒரு மனிதனின் உடலில் தோற்றத்தில் மாற்றம் ஏற்படுவதற்கு வயதும் ஒரு காரணமாக அமைகின்றது. பருவவயது மாற்றங்கள் அழகில் மாற்றத்தைக் காட்டுகின்றது. ஆனால் அந்தந்த வயதுக்கேற்ற அழகு ஒவ்வொருவருக்கும் இருக்கின்றது. அழகான அம்மா, அழகான பாட்டி என்று கூறுவது பற்றி நாம் அறிந்திருக்கி;ன்றோம் அல்லவா. இயற்கையாகவே பெண்களுக்கு மாதவிடாய் நின்று போகும் காலங்களில் உடலிலும் உள்ளங்களிலும் பலவகையான மாற்றங்கள் ஏற்படுகின்றன. எமது வயதுக்கேற்ப நாம் நாள்தோறும் செய்கின்ற உடற்பயிற்சிகள் தசைநார், தோல் மாற்றங்களில் இருந்து எம்மைப் பாதுகாக்கின்றது. தளர்வடைந்த தோல்கள் உடற்பயிற்சிகளின் மூலம் இறுக்கமடைகின்றது. எனவே உடற்பயிற்சி உடலுக்குச் சிறந்த பயிற்சியாகும்.

அத்துடன் காலநிலை மாற்றங்களும் தோலகளைப் பாதிக்கின்றன. எனவே காலநிலைக்கேற்ற உசநயஅ வகைகளைப் பாவிப்பதன் மூலம் அதில் இருந்து எம்மைப் பாதுகாத்துக் கொள்ளலாம். 

இதைவிட உங்கள் உடல்வாகுக்கு உணவுப்பழக்கவழக்கம் அவசியமாகின்றது. நாம் உண்ணுகின்ற உணவு உடலினுள் எவ்வாறான மாற்றங்களை அடைகின்றது என்பதை அறிந்து கொள்ள வேண்டும். அதற்கேற்ப உணவுப் பழக்கவழக்கங்களை மேற்கொள்ளலாம். சிலருக்குச் சிலவகை உணவுவகைகள் ஒவ்வாமையாய் இருக்கும். அது உடனடியாக உடலில் மாற்றத்தைப் பிரதிபலிக்கும். எனவே முதலில் எமக்கேற்ற உணவுகளைத் தெரிந்தெடுத்துக் கொள்ள வேண்டும். அவற்றில் உள்ளடங்கியுள்ள ஊட்டச்சத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொருநாளும் உணவுப்பட்டியல் தயாரிக்கும் போது தேவையான சத்துக்கள் அடங்கிய உணவுவகைகள் வாராவாரம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். சோறு சமைக்கும் அன்று உருளைக்கிழங்கில் கறி செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால், இரண்டும் காபோவைதரேற்று உணவு வகைகளே. அதனால், நன்றாகச் சிந்தித்து உணவுப் பட்டியல் தயார் செய்ய வேண்டும். உணவு வகைகள் எப்படி உண்கின்றோமோ, அதற்கேற்ப அவை சமீபாடடைந்து மலமாக வெளியேற்றப்படல் அவசியமாகின்றது. இல்லையென்றால், தேவையற்ற உடல் உபாதைகள், மலச்சிக்கல் நோய்கள், முகப்பருக்கள் போன்றவை ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் உண்டு. எனவே அளவோடு அவதானமாக உணவு உண்டு அழகோடும் ஆரோக்கியத்தோடும் வாழ்வோம்.


மலச்சிக்கல் எவ்வாறு ஏற்படுகின்றது:

மலக்குடலை வந்தடையும் உணவிலுள்ள நீர்த்தன்மையும் மலக்குடலின் உட்புறச்சுவரிலுள்ள சளி போன்ற படலமும் சரியான முறையில் இருந்தால், மலம் இலகுவாகப் போகும். மலக்குடல் இந்த மலத்திலுள்ள நீர்த்தன்மையை உறிஞ்சிவிட்டால் மலம் நீர்த்தன்மை அற்று இருக்கும். அப்போது குடல் உட்சுவர்களில் ஒட்டிக் கொள்ளும் மலச்சிக்கல் ஏற்படும்.

மலச்சிக்கல் குணமாக:

1. மலச்சிக்கலுக்குச் சிறப்பான காய் நெல்லிக்காய்

2. பேரீச்சம் பழத்தை இரவில் பாலில் ஊற வைத்து,  காலையில் எடுத்துப் 
பிசைந்து சாப்பிட மலச்சிக்கல் ஓடி மறைந்துவிடும்.

3. 20 கிராம் பார்லி அரிசியை எடுத்து 
      அதனுடன் புளிய இலை 40 கிராமைச்     
       சேர்த்துக் காய்ச்சிக் குடித்துவர 
      மலச்சிக்கல் மறைந்துவிடும்.

4. தயிருடன் வெங்காயத்தைச் 
        சிறிதுசிறிதாக வெட்டிப் போட்டு  
       உண்ணலாம்.

5. கீரைவகைகள் சிறந்தது.

6. Birne என்னும் பழம் மலச்சிக்கலை 
        நீக்கச் சிறந்த பழமாகும்.Saturday, November 13, 2010

சிலருக்குத் தோல் எண்ணெய்ப் பசையாக இருக்கும். இதனால் ஆண் பெண் இருவருக்கும் முகத்தில் பரு தோன்றும். கூடுதலாக எண்ணெய்ச்சுரப்பி சுரப்பதனால், இந்த எண்ணெய்மயிர்க்கால் வழியாக வெளிவரும்போது தடைப்பட்டு முகப்பரு வடிவாக உருவெடுக்கும்.முகத்திலுள்ள எண்ணெய்பசையை நீக்கும் வழிமுறைகள்

1 தேக்கரண்டி வெள்ளரிக்காய்ச் சாறு
½ தேக்கரண்டி தேசிப்புளி
3 துளிகள் Rose water
இவற்றை ஒன்றாகக் கலந்து முகத்தில் பரவிப் பூசி 15 நிமிடங்கள் விட்டுப் பின் நன்றாகக் கழுவுங்கள். பலன் கிடைக்கும். கவலைப்படத் தேவையில்லை.

முறை 2:

1 தேக்கரண்டி கடலைமா
2 தேக்கரண்டி வெள்ளரிச்சாறு


இவற்றை ஒன்றாகக் கலந்து கண், வாய் போன்ற பகுதிகளைத் தவிர்த்து முகத்தில் பரவப் பூசுங்கள். அதன் பின் 15 நிமிடங்கள் கழித்துச் சிறிளவு கைச்சூடான நீரால் கழுவுங்கள். எண்ணெய்ப் பசை நீங்கி முகம் பளிச்சென்று இருக்கும். 

பொதுவாகக் கவனிக்க வேண்டியது.

உடற்பயிற்சி உடலுக்கும் முகத்துக்கும் எப்போதும் சிறப்பத் தரும். வியர்வை மூலம் அழுக்குகள் வெளியேற்றப்படுகின்றது, மனதுக்கு மகிழ்ச்சி தருகின்றது.


முகப்பவுடர், முகத்திற்குப் பூசுகின்ற கிரீம், பூச்சுக்கள், முகம் கழுவும் சவர்க்காரநீர், போன்றவற்றை அளவாகப் பயன்படுத்த வேண்டும். 


முகத்தை ஒவ்வொருநாளும் 3,4 முறைகள் கழுவ வேண்டும்.

Thursday, November 11, 2010

வல்லாரை

                                வல்லாரை


வல்லாரை கண்டீரோ. அதன் மகத்துவம் புரிந்தீரோ - மூளை
வல்லாரெல்லாம் சொல்லிச் சொல்லி உண்ணும்
வல்லமை யுணவு இவ்வால்லாரை தானன்றோ.


                            


இயற்கையே எமக்குத் தகுந்த உணவுகளையும் மருந்து வகைகளையும் இலவசமாகத் தந்திருக்கின்றது. அவற்றை நாம் தேடிப்பெற்று அநுபவிக்கத் தயங்கக் கூடாது. நீர் நிறைந்த பகுதிகளில் தானாக வளரும் முண்டரிகபரணி, சரஸ்வதி ஆகு, யோசனைவல்லி என்றேல்லாம் பெயர் பெறுகின்ற வல்லாரையை
France  நாட்டினர் சூப்புச் செய்வதற்குப் பயன்படுத்துகின்றார்கள்.


சிறப்பு:


நரம்புகளுக்கு வலிமை தருகிறது.
தோல்நோய்களுக்கு மருந்தாக அமைகின்றது.
குடல் புண்ணை ஆற்றுகின்றது.
நீர்க்கடுப்புக்கு மருந்தாக அமைகின்றது.
கண் எரிச்சலைக் குணமாக்குகின்றது.
குஸ்டரோகம் ஆரம்பத்தில் சாற்றைப் பூச வேண்டும். அதன் முடிச்சுகளை அகற்றக்கூடியது என Dr.Hunter  கூறியிருக்கின்றார்.

 நினைவாற்றலை அதிகரிக்கச் செய்கின்றது. 
 இரத்தசுத்தி செய்யும் தன்மையுள்ளது.
 பல்லிலேயுள்ள மஞ்சள் நிறம் மறைய 30, 40 நாள்கள் பச்சையாக எடுத்துத் தேய்த்தல் வேண்டும்.
 மனநோய்களுக்கு மருந்தாகவும் காணப்படும். 


அதிகமாக் சாப்பிட்டால்:

தலைச்சுற்று ஏற்படும்
மயக்கம் ஏற்படும்
உடம்பெல்லாம் வலியாக இருக்கும்.

இவ்வல்லாரையை வாரத்திற்கு இரண்டு முறை பாவித்தால் போதுமானது.


வல்லாரை இலை 150 கிராம் வசம்பு 15 கிராம் எடுத்து இவற்றைப் பவுடராக்கி தேனில் கலந்து சாப்பிட்டால் ஞாபகசக்தி அதிகரிக்கும். மந்தபுத்தி நீங்கும்.


உண்ணும் முறை:


1. வல்லாரை, வெங்காயம், பச்சைமிளகாய், தேங்காய்ப்பூ, உப்பு, தேசிப்புளி இவற்றை ஒன்றாக எடுத்து பச்சடி போல் அரைத்துச் சாப்பிடலாம்.
2. வல்லாரையை சிறிதுசிறிதாக அரிந்து அத்துடன் தக்காளிப் பழத்தையும் சிறுசிறு துண்டுகளாக நறுக்கிப் போட்டு வெங்காயம், பச்சைமிளகாய் சிறிதுசிறிது துண்டுகளாக நறுக்கி அத்துடன் சேர்த்து உப்பு, தேசிப்புளி கலந்து உண்ணலாம்.
3. உறைப்பை விரும்பாதவர்கள் பச்சைமிளகாய் சேர்க்கத் தேவையில்லை.

Wednesday, November 10, 2010

சருமம் அழகு பெற

                                                                         தோல்எமது உடலின் பல்வேறுபட்ட உறுப்புக்களையும் போர்த்திப் பாதுகாத்துக் கொண்டிருக்கும் மிகப் பெரிய பரப்பளவுள்ள ஒரு பகுதி தோல் ஆகும். இத்தோலின் தடிப்பு 1 மி.மீற்றர். மேல்த்தோல் 4 அடுக்குகளையுடையது. மெலனின் அளவைப் பொருத்துத்தான் தோலின் நிறம் ஒவ்வொருவருக்கும் அமைகின்றது. மெலனின் அதிகம் சுரப்பவர்கள் கறுப்பு நிறம் உடையவர்களாகக் காணப்படுவார்கள். தொடுகை உணர்வு, உடல் வெப்பநிலையைப் பாதுகாத்தல், விற்றமின் D ஐத் தொகுத்தல்,  விற்றமின் B ஐப் பாதுகாத்தல் போன்ற தொழிற்பாடுகளைத் தோலானது செய்கின்றது. தோலிலே எண்ணெய்ச் சுரப்பிகள் காணப்படுகின்றன. இந்த எண்ணெய்ச் சுரப்பிகள் ஒவ்வொரு மயிர்க்கால்களுக்கும் தோலுக்கும் எண்ணெயைத் தருகின்றது. இது தோல் காய்ந்து போகாமல் பளபளப்பாக இருக்க உதவுகின்றது. தோல் அழகாக இருந்தால் உடலும் முகமும் பொலிவாகத் தெரியும் அல்லவா!


முகம் பளிச் என்று இருப்பதற்கு:


சிறிதளவு கடலை மாவை ஒரு பாத்திரத்தில் எடுங்கள் அதற்குள் 2, 3 சொட்டு எலுமிச்சம் பழச்சாறைக் கலந்து விடுங்கள். இந்தக் கலவையினுள் சிறிதளவு பால் சேர்த்து நன்றாகக் குழைத்து முகத்தில் பரவலாகப் பூசிக் காயவிடுங்கள். நன்றாகக் காய்ந்த பின் குளிர்ந்த நீரினால் முகத்தைக் கழுவுங்கள். முகம் பளிச்சென்று இருக்கும்.


இதேபோல் பயற்றம் மாவை நீரில் அல்லது பாலில் குழைத்து உடலில் தேய்த்துக் குளித்து வர உடல் பொலிவு பெறும்.


முகத்துக்கு எலுமிச்சம் பழச்சாற்றைத் தினமும் பூசி வருகின்ற போது முகத்தில் வளருகின்ற தேவையற்ற முடிகள் நீக்கப்படும்.


கூர்க்கனை வெட்டி அதன் சாற்றை முகத்தில் பூசி வர முகம் குளிர்ச்சியாகவும் அழகாகவும் இருக்கும்.


இவை எல்லாவற்றிற்கும் முன்னோடியாக முகத்தை அடிக்கடிக் கழுவித் துப்பரவாக வைத்திருப்பது அவசியம். இன்று இது போதும் என்று நினைக்கின்றேன். தொடர்ந்து மேலும் தகவல்களை உங்கள் ஆதரவோடு தொடர்கின்றேன்.

அறிமுகம்

md;G thrfHfNs!               உலகம் தன் வளர்ச்சிப் போக்கை துரிதப்படுத்தியுள்ளது. அழகும் அறிவும் அதிவேகமாக முட்டி மோதி உலகில் முன்னேற்றிக் கொண்டிருக்கின்றன. அழகை மேம்படுத்துவதற்காக மக்கள் எல்லோரும் தீவிரமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். யாருக்குத்தான் தான் அழகான இருக்க வேண்டும் என்ற ஆசை இல்லை. பருவமாற்றம் கண்ட பெண்கள் தம்முடைய முகச் சுருக்கங்கள் மறைப்பதற்குப் பலவிதமான முகப்பூச்சுக்களை நாடிவிட்டார்கள். இந்நிலையில் தாயும் மகளும் அருகருகே சென்றால், சகோதரிகளா! என்று ஐயுறும் வண்ணம் தம்மை அழகுபடுத்தத் தாய்மார்கள் இறங்கிவிட்டார்கள். அடுக்களையும் சமையலும் குடும்பச்சுமையுமே வாழ்க்கை என்று வாழும் வாழ்க்கை எதற்கு! உலக வளர்ச்சியில் முன்னிலையில் இடம் பிடிக்கும் பெண்கள், அழகுக் கலைக்கு முக்கிய இடத்தைக் கொடுக்கின்றனர். இப்படி இருக்க வாசகர்களே! நீங்கள் மட்டும் ஏன் அழகான பெண்களைப் பார்த்துப் பெருமூச்சு விடவேண்டும். வாருங்கள். எளிமையான முறையிலே அழகைப் பேணும் முறையை உங்களுக்காகப் பெற்றுத் தர நான் இருக்கின்றேன். 


            அழகைப் பராமரிக்க உடலழுகு மட்டும் போதுமா? உளமும் அழகு பெற வேண்டும் அல்லவா? உடலும் ஆரோக்கியம் பெற வேண்டும் அல்லவா? எனவே நோய்கள் தடுப்பதற்குரிய ஆலோசனைகளும் இங்கே அவ்வப்போது உங்கள் கண்களுக்கு முன் வந்து விழும். அதனூடும் பயன் பெறுங்கள். சில மருத்துவக் குறிப்புக்களும் பார்த்து மகிழலாம். எல்லாவற்றிற்கும் முன் உங்கள் ஊக்கமும் ஆலோசனையும் வரவேற்கப்படுகின்றது. 


அன்புடன்


சந்திரகௌரி சிவபாலன்