Pages

Friday, November 26, 2010

நீரிழிவு நோய் (சர்க்கரை நோய்)

                           நீரிழிவு நோய் (சர்க்கரை நோய்)

''நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்'' நாம் தேடிக்கொள்ளும் நோய்களும் உண்டு. நமது பெற்றோர் நமக்கு அன்பளிப்பாகத் தருகின்ற நோய்களும் உண்டு. இந்தவகையிலே உலகத்தையே ஆட்டிப்படைக்கும் பரம்பரை நோயாகக் கருதப்படும் நீரிழிவு நோய் பற்றி வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமையடைகின்றேன். பலர் இது பற்றி என்னிடம் வினாவியதற்கமைய என் தேடலை இங்கு தெளிவாக்குகின்றேன். 

இந்நோய் பரம்பரையாக வருவதாக மருத்துவம் எடுத்துக்காட்டியிருந்தாலும், யாருக்கு வேண்டுமானாலும் இந்நோய் ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. இதுபற்றி எமது பிள்ளைகளுக்கு வராமல் நாம் கவனம் எடுப்பது அவசியமாகப்படுகின்றது. மனஅழுத்தம், உடற்பயிற்சியின்மை, கவலை, ஒழுங்கற்ற உணவுப்பழக்கவழக்கம், கூடிய கொழுப்பு உணவுகள் உட்கொள்ளுதல் போன்றவை நீரழிவை எமக்குக் கொண்டுவந்து சேர்த்துவிடும். 

இரப்பைக்குப் பின்னால் இருக்கின்ற பான்கிறியாஸ் என்கின்ற சுரப்பியிலே பல திட்டுக்கள் இருக்கின்றன. இத்திட்டுக்களிலேயே இன்சுலின் சுரக்கப்படுகின்றது. இந்த இன்சுலின் இரத்தத்துடன் கலந்து உடலுக்குச் சக்தியைக் கொடுக்கின்றது. இந்த இன்சுலினில் இருக்கின்ற சீனியை உடல் செல்கள் எரிபொருளாகப் பாவிக்கின்றது. இந்த பான்கிறியாஸ் என்ற சுரப்பியில் பாதிப்பு ஏற்பட்டால் இன்சுலின் உற்பத்தி செய்ய முடியாது போய்விடும்.  இந்தச் சுரப்பி இரப்பையின் பின் இருப்பதனால் வயிறு பெருத்துக் காணப்பட்டால் இச்சுரப்பி நசுக்கப்படும். இதன் மூலமும் இன்சுலின் சுரப்பது தடுக்கப்படும். இதனால் செல்களின் இயக்கம் தடுக்கப்படும். இந்தச்சீனியின் அளவு சரியான முறையில் கட்டுப்படுத்தப்படவில்லை என்றால், நாடிகளின் சுவர்களில் கொழுப்புப்படியும் சந்தர்ப்பம் ஏற்படுகின்றது. 

இந்நோய் மூன்று வகையாக் காணப்படுகின்றது. முதலாவது வகை இன்சுலின் சுரப்பிகள் இன்சுலினைச் சுரக்கும் தன்மையை இழந்திருப்பதனால் ஏற்படுகின்றது. இது அதிகமாகக் குழந்தைகள், சிறுவர்கள் இளம் வயதினருக்கு ஏற்படுகி;ன்றது. இரண்டாவது வகை இன்சுலின் போதியளவு சுரக்காததனால் ஏற்படுகின்றது. 90 வீதமானோர் இக்காரணத்தினால் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். மூன்றாவது வகை கர்ப்பகாலத்தில் வருகின்ற நீரிழிவாகும். இது 2 தொடக்கம் 4 விதமானவர்களுக்கு ஏற்படுகின்றது. குழந்தை பிறந்தவுடன் சுகமாகி விடுகின்றது. சிலவேளை பிற்காலத்தில் மீண்டும் தோன்றலாம். 

நீரிழிவு நோயாளிக்கு காயம் சுகமாவது கடினம்:

இன்சுலினின் உற்பத்தி குறையும் போது இரத்தம் உறைவதற்குத் தேவையான பைரினோஜன் என்னும் பொருள் உற்பத்தியாவதில்லை. இதனால் இரத்தம் உறையாது போக காயம் குணமடையமாட்டாமல் போகின்றது. இதனாலேயே இரத்தத்தில் இருக்கின்ற சீனிச்சத்து சிறுநீராக அடிக்கடி வெளியேறுகின்றது. 


நீரிழிவு நோயைத் தவிர்ப்பதற்குரிய உணவுவகை:

பூமியிலே அனைத்தும் எமக்காகப் படைக்கப்பட்டிருக்கின்றன. முடியாது, இயலாது என்று யாரும் எதற்கும் கவலைப்படத் தேவையில்லை. இருக்கவே இருக்கின்றது இயற்கையில் உணவுவகை. அதில் 

1. பாவற்காய்:

பெயரைச் சொன்னாலே நாவில் கசப்புச் சுவை எட்டுகிறது அல்லவா! கசப்புத் தான், ஆனால் நீரிழிவு நோயாளிக்குத் தேவையான இன்சுலின் போன்ற ஒருவகைப் பதார்த்தம் இதில் இருக்கின்றதாம். இன்சுலின் அளவைக் கட்டுப்படுத்தும் தன்மையும் உள்ளது. அப்படி என்றால், அது உகந்தது தானே.

உண்ணும் முறை:
  
பாவற்காயை குளிர் நீரில் நன்றாகக் கழுவி நீருடன் சேர்த்து அரைத்து  காலை மாலை இருவேளை இச்சாற்றை அருந்தி வர பயன் கிடைக்கும்.

பச்சையாக சிறுசிறு துண்டுகளாக வெட்டி அத்துடன் சின்னவெங்காயம் பச்சைமிளகாய் சிறுசிறு துண்டுகளாக அரிந்து சேர்த்து உப்பு தேசிப்புளி கலந்தும் சாப்பிடலாம்.

வெந்தயம்:
நன்றி: திரு சதா.சிறிகாந்தா


  வெந்தயத்தில் Triconelline, Mucilage,Saponin, Cholin, Manose போன்ற பொருள்கள் இருக்கின்றன. அத்தடன் நிக்கோடின் அசிட் என்னும் உயிர்ச்சத்து B யும் இருக்கின்றது. அத்துடன் தாதுப் பொருள்கள், புரதம், ஈரலுக்குத் தேவையான மருத்தவக் குணமும் இருக்கின்றது. இரத்தத்தில் வெல்லம் அதிகமாக இருப்பவர்கள் 100 கிராம் வரை உண்ண வேண்டும். மற்றையோர் ஒரு நாளுக்கு 25 கிராம் உண்ண வேண்டும். உடல் சூட்டைக் குறைக்கும் தன்மையும் வெந்தயத்துக்கு உண்டு.  

உண்ணும் முறை:

கறிகளுக்கு சாதாரணமாகச் சேர்த்துக் கொள்ளலாம்.
வெந்தயத்தில் குழம்பு செய்து உண்ணலாம்.
நோயுள்ளவர்கள் பொடியாக்கி நீரில் ஊற வைத்து அல்லது முழு வெந்தயத்தை சிறிதளவு எடுத்து நீரில் ஊற வைத்து அடுத்தநாள் காலையில் அந்நீரை அருந்தலாம். ஊறிய மிகுதியை கறிக்குப் பயன்படுத்தலாம்.

2 comments:

 1. பயனுள்ள தகவல்கள்.

  மேலும்தொடர வாழ்த்துகள்.
  நன்றி,
  வணக்கம்.

  ReplyDelete


 2. சர்க்கரை நோயாளி
  களுக்கு ஏற்ப்படும் காயங்களை ஆற்றக்கூடிய மருந்து தேன்

  ReplyDelete