Pages

Sunday, June 12, 2011

இரத்தச் சோகை       இரும்பை விரும்பாவிடில் 
       இயல்பு நிலை தளர்ந்து விடும்
       இரும்பு தேவை உலகுக்கு
       இரும்பு தேவை உடலுக்கு
       இரும்பு விரும்ப 
       இரும்பு உள்வரைத் தேடவேண்டும்
       இருக்குமிடம் தெரிந்து கொண்டு
       இரும்பாரைத் துணை சேர்க்க வேண்டும்.உடல் முழுவதும் ஒட்சிசன் சீரான முறையில் ஓடவில்லை என்றால், உடல் பல பிரச்சினைகளைச் சந்திக்கும். மூளைக்கு ஒட்சிசன் தேவையான அளவுக்குக் கிடைக்கவில்லையென்றால், மூளை தன் தொழிற்பாடடைச் சரியான முறையில் செய்யமுடியாமல் போய்விடும். ஹீமோகுளோபின் ஆனது இரத்தத்திலுள்ள ஒட்சிசனை உடல் முழுவதும் கொண்டு செல்லும் பணியைத் தலைமேல் கொண்ட செய்கின்றது. இந்த ஹீமோகுளோபின் புரதம், இரும்புச்சத்து இரண்டினாலும் உருவானதே. இரத்தத்தில் சிவப்பணு குறைவதுடன் சிவப்பணுவிலே ஹீமோகுளோபின் அளவு குறைந்து காணப்படும்போது இரத்தச்சோகை என்னும் நோய் ஏற்படுகின்றது. உடலிலே இரும்புச்சத்து குறையும் பட்சத்தில் சிவப்பணு குறைவதுடன் டீ12இ  குழடiஉ யஉனை போன்றவைக்குப் பற்றாக்குறை ஏற்படும். 
            ஆண்களுக்குச் சராசரியாக ஈமோகுளோபினானது 100 மி.லீட்டர் இரத்தத்தில் 12 – 18 கிராம் அளவில் இருக்கவேண்டியது அவசியமாகியது. பெண்களுக்கு 12 – 16 கிராம் அளவில் இருக்கு வேண்டியதும் அவசியமாகின்றது. 
            பெரும்பாலும் பெண்களே அதிகமாக இந்நோயினால் பாதிக்கப்படுகின்றனர். அதிகமான இரத்த இழப்பு, சிவப்பு அணுக்களின் உற்பத்தி குறைதல், சிவப்பணுக்களின் அழியும் தன்மை. இரத்தநாளங்களில் கண்ணுக்குத் தெரியாத இரத்துக்கசிவு, போன்றவை இந்நோய் ஏற்படுவதற்குக் காரணங்களாகின்றன. பெண்களுக்கு மாதவிடாயின் போதும், பிள்ளைப்பேற்றின் போதும் அதிகமான இரத்துப்போக்கு ஏற்படுவதனால், பெண்கள் இந்நோயினால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். 

            இந்நோயுள்ளவர்களைப் பார்த்தவுடன் கண்டுகொள்ள முடியாது. இரத்தப்பரிசோதனையின் போதே அறியக்கூடியதாக இருக்கின்றது. இவர்களுக்கு விபூதி, அரிசியைச் சாப்பிடத் தூண்டும் உணர்வு ஏற்படும். இந்நோயுள்ளவர்களின் அறிவுத்திறன் குறைந்து காணப்படும். ஒருநிலைப்பாடு இன்றியிருப்பதுடன், கவனக்குறைவு  காணப்படுவதனால் பரீட்சை எழுதுவதற்குக் கடினப்படுவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தமது கடமையைச் சரியான முறையில் செய்யமுடியாமல் இருப்பர். இவர்கள் எப்போதும் களைப்படைந்தவர்களாகக் காணப்படுவதுடன், இவர்களுக்கு மயக்கம், தலைச்சுற்று, தலைவலி, கால்முகம் வீங்குதல், கண், உதடு, நகம் வெளிர்தன்மையுடன் காணப்படுதல் போன்றவை இதன் அறிகுறிகளாகக் காணப்படுகின்றன. இவ் அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாக இரத்தப்பரிசோதனை செய்தல் அவசியமாகின்றது. வைத்தியர் இரத்தத்திலுள்ள இரும்புச்சத்தை அதிகரிக்கச் செய்யும் மருந்து மாத்திரைகளை வழங்குவார். இதைவிட இயற்கையாகவே எமக்குக் கிடைக்கக் கூடிய உணவுவகைகளை உட்கொள்வதன் மூலம் இந்நோயிலிருந்து விடுபடலாம். 

சோயா உணவுகளை அதிகமாக உண்பது அவசியமாகின்றது.

முருங்கைக்கீரையை துவரம்பருப்புடன் சமைத்து ஒரு கோழிமுட்டையை உடைத்துவிட்டுக் கிளறி நெய்விட்டு 41 நாட்கள் சாப்பிட்டுவர இரத்தம் விருத்தியடையும்.

தினசரி கொய்யாப்பழம் சாப்பிட்டுவர வேண்டும். 

பீர்க்கங்காய் வேர்க் கசாயமும் இந்நோய்க்குச் சிறந்த மருந்தாகும்.

நேந்திரவாழைப்பழம் இரும்புச்சத்தை உடலுக்குக் கொடுக்கின்றது.
பீர்க்கங்காய், முருங்கைக்காய், சுண்டங்காய், பாவற்காய், சிறந்தவையாகக் கருதப்படுகின்றன.

பீட்றூட், Broccoli போன்ற மரக்கறிகளும் நாவல், திராட்சை, அப்பிள், நாவல், பேரீச்சை ஆகிய பழங்கள் இந்நோயுள்ளுவர்கள் அதிகமாகச் சாப்பிட வேண்டியது அவசியமாகின்றது. 

http://www.youtube.com/watch?v=_mziGqISSpY

9 comments:

 1. நீங்கள் தரும் அனைத்து தகவல்களும் மிகவும் பயனுள்ளவை. நன்றி. நிறைய தகவல் தரவும்.

  ReplyDelete
 2. மிகவும் பயனுள்ளவை. நன்றி.

  ReplyDelete
 3. உங்கள் பக்கம் முதல் வருகை இதுவேதான்..
  நல்ல முக்கியமான் கருத்துக்களை பகிர்கிறீங்கள்..

  தொடருங்கள் .
  தொடர்ந்து வருவேன்

  !!நம்ம பக்கமும் காத்திருக்கு உங்க கருத்துக்காக!!

  ReplyDelete
 4. வித்தியாசமாய் இருக்கிறது.. உங்கள் பதிவுகள்.
  தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்களூடன்.

  ReplyDelete
 5. நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
  வாயநாடி வாய்ப்பச் செயல்

  தங்கள் வனப்பு இக்குறளுக்கேற்ப செயல்படுவது கண்டு பாராட்டுகிறேன் தொடர்க வளர்க
  புலவர் சா இராமாநுசம்
  புலவர் குரல்

  ReplyDelete
 6. பகிர்வுக்கு நன்றி மேடம்

  ReplyDelete
 7. மிகவும் பயனுள்ள தகவல்கள். மிக்க நன்றி

  ReplyDelete
 8. மிகவும் பயனுள்ள வித்யாசமான தகவல்கள்.
  பகிர்வுக்கு மிக்க நன்றி. பாராட்டுக்கள்.

  ReplyDelete
 9. nice post...........

  ReplyDelete