பத்திய அட்டவணை (Diet Chart)
எப்படி இந்தப் பெண்களுக்கெல்லாம் அழகான மெல்லிய கொழுப்பில்லாத வாலிப்பான உடல் அமைந்திருக்கின்றது என்று பெருமூச்சு விட்டு மனதுக்குள் புழுங்குகின்ற பெண்கள் எத்தனை பேர் எம்மத்தியில் இருக்கின்றார்கள். என்ன இது வண்டியும் தொந்தியும் இப்படிப் பார்க்க அவலட்சணமாக இருக்கின்றது. காற்சட்டையைப் போட்டால் இடுப்பில் நிற்குது இல்லையே. வழுகி வழுகி தொப்பைக்குக் கீழே அல்லவா வந்து விழுகின்றது என்று கவலைப்படும் ஆண்கள் எத்தனை பேர் எம்மத்தியில் இருக்கின்றார்கள். கொழுப்பைக் குறைத்தால் இந்தக் கவலை குறைந்துவிடும் என்று நம்பினாலும் செய்ய முடியால் அல்லவா இருக்கின்றது. என்ற கவலை இருக்கின்றதா? மனதை முற்றுமுழுதாக திடப்படுத்தி கொள்ளுங்கள். இது அழகுக்கு மட்டுமல்ல ஆயுளுக்கும் அவசியம் கடைப்பிடிக்க வேண்டியது.
சைவஉணவு உண்பவர்கள்:
காலை உணவு:
250 கிராம் பாண் துண்டுகளில் பட்டர் பூசி சாப்பிடலாம். ஓட்தானியம் (Oat) cornflakes ,சீனி இல்லாமல் பாலுடன் சாப்பிடலாம். இவற்றுடன் ஏதாவது ஒரு பழம். கோப்பி அல்லது தேநீர், பால் சீனி இல்லாமல் குடிக்கலாம்.
மதிய இரவு உணவுகள்:
2 அல்லது 3 சப்பாத்திகள் அல்லது 4 துண்டுகள் பாண் இவற்றை சரக்குப் பொருள்கள் சேர்க்காது அவித்த மரக்கறிகளுடன் அல்லது ஒரு சிறிய பாத்திரத்தில் (Bowl) சமைத்த மரக்கறியுடன் சேர்த்துச் சாப்பிடலாம்.
1 சிறிய கிளாஸ் தயிர் அல்லது Butter Milk ஐ உப்பு, சீனி சேர்க்காது குடிக்க வேண்டும்.
அசைவ உணவு உண்பவர்கள்
காலையுணவு:
கொஞ்சம் பழங்கள் அல்லது 1 கோப்பை பழரசம் ( Fruit-Juice) ஒரு முட்டை, பட்டர் பூசிய 2 பாண் துண்டுகள், பால், சீனி கலக்காத 1 கோப்பை தேநீர் அல்லது கோப்பி.
மதியம் அல்லது இரவு உணவு:
சலாட், கோழி சூப், அவித்த அல்லது உலர்த்திய இறைச்சி ஒரு துண்டு அல்லது மீன் ( இரண்டு துண்டுகளுக்கு மேற்படக்கூடாது) 1 நான் (Naan) அல்லது 2 அல்லது 3 சப்பாத்தி, பழம் சேர்க்காத தயிர் அத்துடன் கொஞ்சம் பழங்கள்.
பொதுவாக யாராக இருந்தாலும். இரவில் 6 மணிக்குப்பின் சாப்பிடக் கூடாது.
அனைத்துச் சத்துக்களும் அடங்கிய அளவான உணவை சுவையாக உண்டு ஆரோக்கியமாக அழகாக வாழ்வோம்.
மிகவும் பயனுள்ள ஆரோக்கியமான பதிவு. நன்றி.
ReplyDelete[இருப்பினும் ஒரு சந்தேகம்.
பாண் துண்டுகள் என்றால் என்ன?]
போத்துக்கேய சொல் ஆனாலும் இலங்கையில் அவர்கள் ஆட்சி இருந்தமையினால் தமிழில் வந்து தமிழாய் ஒட்டிக் கொண்டது . தமிழ் வடிவம் இப்போது கொடுக்கப் பட்டாலும் ஆங்கில மோகத்தால் Bread ஆகவே இப்போது பயன்படுத்தப் படுகின்றது
Deleteஅனைவருக்கும் பயன்படும் அருமையான பதிவு
ReplyDeleteஅடிக்கடி பதிவு தர வேண்டுகிறேன்
பகிர்வுக்கு நன்றி
புலம்பெயர்வில் ஓட்டம் குறைவதில்லை. உறவினர்கள் துணை இல்லை . நண்பர்கள் நேரம் தருவதில்லை. இந்த சூழலில் முதன்மை வாழ்க்கை அதன் பின்தான் மற்றவை என்று முடிவை எடுத்ததனால் நேரம் கிடைக்கும் போது பயன்படுத்திக் கொள்ளுகின்றேன். ஆனாலும் உங்கள் கரிசனைக்கு மிக்க நன்றி.
Deleteபத்திய அட்டவணை சூப்பர். முயற்சி செய்து பார்க்கிறோம்
ReplyDeleteமிக்க நன்றி நண்பரே
Deleteநல்லதொரு இடுகை.அவசியம் குறித்துக்கொள்ளப்பட வேண்டியவை.பகிர்வுக்கு நன்ரி!
ReplyDeleteஇந்த பதிவு நிச்சயம் எல்லோருக்கும் பயன் தரக்கூடியது சந்திரகெளரி!
ReplyDeleteஅருமையான பதிவு
ReplyDeleteதமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்
இந்த தமிழ் புத்தாண்டில் உங்கள் பதிவுகளை தமிழ் போஸ்டில் இணைத்து பயன் பெறுங்கள்
தமிழ் போஸ்ட் செய்தி தாள் வடிவமைப்பு உங்கள் பதிவுகளை அழகாக வெளிகாட்டும்
http://tamil.dailylib.com
To get vote button
http://tamil.dailylib.com/static/tamilpost-vote-button/
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் …
நன்றி
தமிழ் போஸ்ட்
hii.. Nice Post
ReplyDeleteThanks for sharing
For latest stills videos visit ..
www.ChiCha.in
www.ChiCha.in