Pages

Sunday, March 2, 2014

தடிமல் இருமல்


வீட்டினுள்ளும் குளிர் வெளியிலும் குளிர். தாங்குமா உடல். இச்சு இச்சு என்று தும்மல். லொக்கு லொக்கு என்று இருமல். உலகத்தை சளித்து என்னவாவது. வாழவேண்டுமே. வழியா இல்லை. இயற்கையே எமக்கு மருந்து தந்திருக்கிறதே. வேண்டாத இரசாயனங்கள் எதற்கு? இதற்கு முன் ஒருமுறையும் இவ்வாறான ஒரு பதிவு தந்திருக்கின்றேன். இது சற்று விரிவானது
  
மாரி காலத்தில் எங்களுடைய மென்மையா உடல் சவ்வுகள் வலுக் குறைந்து காணப்படும். நோய் எதிர்ப்பு செல்கள் குறைவான போக்குவரத்தை மேற்கொள்ளும். குளிர் நேரத்திலே பஸ், கோப்பி கடை போன்ற இடங்களில்  பலர் கூடி இருப்பதனால் சுத்தமில்லாத காற்று காணப்படும். இவ்வாறான இடங்களில் சில வைரஸ்கள் இலகுவாக வாழுகின்ற தன்மையைப் பெற்றிருக்கும். அத்துடன் இலகுவாக பலவீனமான எங்கள் உடலிலே பற்றிக்கொள்ளும். ஆரம்பத்தில் தொண்டை கடிக்கும் பின் மூக்குத் துவாரத்தினூடாக நீர் வடியும்

இவ்வாறன காலங்களில் sauna இக்கு போகக்கூடாது. ஏனென்றால் நோய் உள்ள இந்த நேரத்தில் எங்கள் உடல் அமைதியாக இருக்க வேண்டியது அவசியம். விட்டமின் c தடிமலுக்கு சிறந்தது. யார் போதுமான அளவிற்கு விட்டமின்கள் உள்ள உணவுகள் பழங்கள் மரக்கறிகள் போதுமான அளவு உண்ணுகின்ற கத்தைக் கொண்டிருக்கின்றார்களோ பழக்கொண்டிருக்கின்றார்களோ அவர்கள் தடிமலுக்குப் பயப்படத் தேவை இல்லை.

தடிமல் இருமலுக்ககுரிய வீட்டு வைத்தியம்

உடல் களைப்பில்லாது நன்றாக மூடிக்கட்டிக் கொண்டு நோய் உள்ள காலங்களில் படுத்திருக்க வேண்டியது அவசியமாகின்றது..

ஒவ்வொரு நாளும்  2 தொடக்கம் 3 லீட்டர்  நீர் குடிக்க வேண்டும். இதன் மூலம் சளி இலகுவாக்கப்பட்டு இறுக்கத் தன்மை குறைந்து வெளியேறிவிடும்

கழுத்து நோவை salbei டீ சுகமாக்கும். கழுத்து நோவிற்கு கட்டித்தயிரை விரல்களால் எடுத்து கழுத்தில் பூசி ஒரு துணியால் அரை மணி நேரம் அதை மூடிக் கட்டி விடவும். பின் துடைத்து எடுத்து விடலாம் அல்லது கழுவவும்

அறையை ஈரத்தன்மையாக வைத்திருக்க வேண்டும். வெப்பமூடியில் ஈரத் துணியைப் போட்டு வைக்கலாம் அல்லது ஒரு கோப்பையில் தண்ணீர்  எடுத்து வெப்பமூட்டியின் மேல் வைக்க வேண்டும்,

துத்தநாகமும் விட்டமின் c யும் சேர்ந்த பவுடர் கரைத்துக் குடிக்கலாம்.
கூடுதலாக தடிமலுக்குரிய தேயிலைகளை வாங்கி தேன் கலந்து குடிக்கவும். அல்லது வீட்டில் கொதிநீரினுள் mint இலைகளை ஊறப்போட்டுக் குடிக்கலாம்.

தடிமலினால் வரும் கழுத்திலுள்ள காயங்களை அல்லது வீக்கத்தை நீக்கும். அத்துடன் சளியை இளகச் செய்யும்.

கோழி மரக்கறிகள் சேர்த்த சூப்பை வீட்டில் செய்து குடிக்கலாம்.

kamille என்று சொல்லப்படும் தேயிலை ஆவி பிடிக்கவும். மூக்கினால் மூச்சை உள் 
இழுத்து வாயினால் மூச்சை வெளியிடவும். 1௦ நிமிடங்கள் ஆவி பிடிக்கவும்.

நெஞ்சில் சளி பிடித்திருந்தால் schmalz என்று சொல்லப்படுகின்ற பன்றி அல்லது வாத்துக்கொழுப்பு அல்லது பட்டர் கொழுப்பு அதாவது நெய் என்றும் சொல்லலாம் அதனை நெஞ்சுப்பகுதியில் பூசி அதன் மேல் eukalyptus என்று சொல்லப்படுகின்ற எண்ணையை தடவ வேண்டும் .இது சுவாசத்தை இலகுவாக்கும். eukalyptus ஐ vicks இலை என்று எம்மவர் அழைப்பார்கள்.


                                                                                          
                                      Hotwatter Bottle ( Warmflasche)
காது குத்துக்கு  Hotwater bottle வைக்க வேண்டும். சின்ன வெங்காயத்தை சிறிதாக வெட்டி ஒரு துணியில் கட்டி காதின் மேல் பிடித்துக் கொண்டு இருக்கவும்.

                                  
பெப்பெர்மினஸ் எண்ணையை நெற்றியின் இறுதிப்பகுதியில் பூசினால் தலையிடி குறைவதற்கு வாய்ப்பிருக்கின்றது. இது கண்களில் படாது பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

37 தொடக்கம் 4௦ சூட்டில் நீருள்ள பாத்திரத்தினுள் கால்களை அழுத்தி வைக்கவும் இது தலையிடியைக் குறைக்கும்

உடல் சூடு அதிகரித்து இருந்தால் முழங்காலின் கீழ்ப்பகுதியில் ஈரத் துவாயை எடுத்து சுற்றிக்கட்டவும். அதற்க்கு மேல் உலர்ந்த ஒரு துவாயைக் கட்டவும். இந்த ஈரத் துவாயை ஒவ்வொரு இருபது நிமிடங்களுக்கு ஒருமுறை மாற்ற வேண்டும்.

இந்த வீட்டு வைத்தியங்கள் எதுவும் குணமடையச் செய்யவில்லை என்றால் அருகிலுள்ள மருந்துக்கடையில் நோயை சொல்லி மருந்தை வாங்கலாம். இல்லை என்றால் வைத்தியரிடம் நாடலாம். முதலில் கை வைத்தியம் முடியவில்லை என்றால் மாத்திரம் மருத்துவர் வைத்தியம்.


நன்றி எனது அனுபவமும் vigo பத்திரிகையும் 

7 comments:

 1. எளிமையான குறிப்புகள்... நன்றி சகோதரி...

  ReplyDelete
 2. மிக்க நன்றி

  ReplyDelete
 3. நல்ல குறிப்புகள் எளிமையானவையும் கூட. மிக நன்றி சந்திர கௌரி.

  ReplyDelete
 4. தகவல் பெட்டகம் ! பயனுள்ள குறிப்புகள் சகோதரி!!

  ReplyDelete
 5. பயனுள்ள வீட்டு வைத்தியங்களுக்கு மிக்க நன்றி சகோதரி.

  ReplyDelete
 6. தகவலுக்கு நன்றி சகோதரியாரே,,,,,,
  Killergee
  www.killergee.blogspot.com

  ReplyDelete
 7. இங்கு பதிவிடுவதற்கு மன்னிக்கவும்
  ......................................................
  வணக்கம் நாங்கள் பூச்சரம் எனும் தளம்,
  தமிழ் பிளாக்ஸ்பாட்களில் வழக்காமாக பயன்படுத்தும் எழுத்துருக்களுக்கு பதில் இணையுரு (WebFont) எழுத்துக்களை பயன்படுத்த எந்த நாங்கள் வசதி ஒன்றை அளிக்கிறோம். இது முழுக்க முழுக்க இலவசம் தான். தமிழ் பிளாக் ஸ்பாட் தளங்களை ஆங்கில தளங்கள் போன்று உருவத்திலும், அழகிலும் உயர்த்தவேண்டும் என்ற எண்ணம் தான் உங்களை நாங்களே இதுபோன்று அணுக வைத்துள்ளது. 
  - இணையுரு (WebFont)  என்றால் என்ன? அதனால் என்ன பயன்?
  - இதை பயன்படுத்துவதால் நம்முடைய பிளாக் ஸ்பாட்டிற்கு  ஏதேனும் தீங்கு ஏற்படுமோ?
  - இது அவர்களுடைய தளத்தை விளம்பரப்படுத்த செய்யப்படும் உத்தியோ?
  - அவர்களாகவே தானாக வந்து உதவுவதாக சொல்வதில் ஏதேனும் பிரச்சனை இருக்குமோ?
  என்றெல்லாம் உங்கள் மனதில் நிச்சயம் கேள்விகள் எழும். அவ்வாறு தாங்கள் பயப்படவோ அல்லது ஐயமுறவோ தேவையில்லை. 100% எங்களை நம்பலாம். நாங்கள் கீழே கொடுத்துள்ள பதிவை பாருங்கள் உண்மை விளங்கும்.  
  தமிழ் கணிமையை (Tamil Computing) வளர்ச்சியுறும் நோக்கில் தான் நாங்கள் செயல்படுகிறோம். மற்ற மொழியினர் இதுபோன்ற வசதிகளை எப்போதே செய்துவிட்டனர், ஆனால் நாம் இந்த வசதியை இப்போது தான் இந்த பதிவில் படித்துகொண்டு இருக்கிறோம். மற்றமொழிகளை போல நம் மொழியையும் அழகாக வைத்துகொள்ள வேண்டுமல்லவா?...
  சும்மா... பேச்சுக்கு தமிழ் அழகு என்று சொல்வதை காட்டிலும் செய்து காட்டுவதை தான் நாங்கள் நோக்கமாக கொண்டுள்ளோம்.
  இந்த முறையில் உருவாக்கப்பட்ட ஒரு மாதிரி பிளாக்ஸ்பாட் இதோ பாருங்கள். http://poocharamtamilforum.blogspot.in/2014/05/this-is-sample-post.html 
  இதோ இணையுருக்கள் எவ்வாறு இணைப்பது என்பதை பற்றிய கட்டுரை 
  1) http://poocharam.net/viewtopic.php?f=57&t=1891
  2) http://poocharam.net/viewtopic.php?f=57&t=2053

  (அல்லது)
  1) http://puthutamilan.blogspot.in/2014/05/blog-post_14.html 
  2) http://puthutamilan.blogspot.in/2014/05/webfont-2.html  

  மேலும் ஏதேனும் உங்களுக்கு உதவியோ அல்லது ஐயமோ ஏற்பட்டால் தயங்காமல் rashlak@gmail.com என்ற முகவரிக்கோ அல்லது எங்கள் தள இடுகையிலோ அல்லது பிளாக்ஸ்பாட் இடுகையிலோ கேட்கலாம்.

  நன்றி மற்றும் வணக்கம்
  ராஜு.சரவணன்  

  படித்தவுடன் இதை நீக்கிவிடவும் 

  ReplyDelete